உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 9:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 வேறு தேசத்தைச் சேர்ந்த ஒருவன் உங்களோடு வாழ்ந்துவந்தால் அவனும் யெகோவாவுக்கு பஸ்கா பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.+ அதற்கான எல்லா சட்டதிட்டங்களையும் பின்பற்ற வேண்டும்.+ இஸ்ரவேல் குடிமக்களாகிய உங்களுக்கும் சரி, உங்களோடு வாழ்கிற வேறு தேசத்து ஜனங்களுக்கும் சரி, ஒரே சட்டம்தான் இருக்க வேண்டும்’”+ என்றார்.

  • ரூத் 1:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 ஆனால் ரூத், “தயவுசெய்து என்னைத் திரும்பிப் போகச் சொல்லாதீர்கள். உங்களோடு வர வேண்டாமென்று சொல்லாதீர்கள். நீங்கள் எங்கே போகிறீர்களோ அங்கே நானும் வருவேன், நீங்கள் எங்கே தங்குகிறீர்களோ அங்கே நானும் தங்குவேன். உங்களுடைய ஜனங்கள்தான் என்னுடைய ஜனங்கள், உங்களுடைய கடவுள்தான் என்னுடைய கடவுள்.+

  • 2 ராஜாக்கள் 5:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 பின்பு நாகமான் தன்னுடைய ஊழியர்கள் எல்லாரையும் கூட்டிக்கொண்டு உண்மைக் கடவுளின் ஊழியரைப் பார்க்கப் போனார்.+ அவரிடம், “இஸ்ரவேலின் கடவுள்தான் உண்மையான கடவுள். அவரைத் தவிர உலகத்தில் வேறு கடவுளே இல்லை என்பதை இப்போது தெரிந்துகொண்டேன்.+ தயவுசெய்து இந்த அடியேன் தரும் அன்பளிப்பை வாங்கிக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்.

  • 2 நாளாகமம் 6:32, 33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 வெகு தூரத்திலுள்ள தேசத்தில் குடியிருக்கிற இஸ்ரவேலர் அல்லாத ஒருவர் உங்களுடைய மகத்தான பெயரையும்*+ கைபலத்தையும் மகா வல்லமையையும் பற்றிக் கேள்விப்பட்டு இங்கே வந்து இந்த ஆலயத்தை நோக்கி ஜெபம் செய்தால்,+ 33 நீங்கள் குடியிருக்கிற பரலோகத்திலிருந்து கேளுங்கள். அந்த நபர் கேட்பதையெல்லாம் கொடுங்கள். அப்போது, உலகத்திலிருக்கிற எல்லா மக்களும் இஸ்ரவேலர்களைப் போலவே உங்களுடைய பெயரைத் தெரிந்துகொண்டு+ உங்களுக்குப் பயப்படுவார்கள். நான் கட்டிய இந்த ஆலயம் உங்கள் பெயரைத் தாங்கியிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வார்கள்.

  • ஏசாயா 56:6, 7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 என் ஜனங்களோடு சேர்ந்துகொள்ள வருகிற மற்ற தேசத்து ஜனங்களையும் நான் ஏற்றுக்கொள்வேன்.

      யெகோவாவுக்குச் சேவை செய்யவும், யெகோவாவின் பெயரை நேசிக்கவும்,+

      அவருடைய ஊழியர்களாக இருக்கவும் அவர்கள் வருவார்கள்.

      அவர்கள் என்னுடைய ஓய்வுநாளின் புனிதத்தைக் கெடுக்காமல் அதை அனுசரிப்பார்கள்.

      என்னுடைய ஒப்பந்தத்தின்படி நடப்பார்கள்.

       7 அவர்களையும் என்னுடைய பரிசுத்த மலைக்குக் கூட்டிக்கொண்டு வருவேன்.+

      என்னுடைய ஜெப வீட்டில் அவர்களைச் சந்தோஷமாக இருக்க வைப்பேன்.

      என்னுடைய பலிபீடத்தில் அவர்கள் செலுத்துகிற தகன பலிகளையும் காணிக்கைகளையும் ஏற்றுக்கொள்வேன்.

      ஏனென்றால், என் வீடு எல்லா ஜனங்களுக்குமான ஜெப வீடு என்று அழைக்கப்படும்.”+

  • அப்போஸ்தலர் 8:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 அதன்படியே அவர் எழுந்து போனார்; அப்போது, எத்தியோப்பியர்களுடைய ராணியின்* சொத்துகள் எல்லாவற்றையும் நிர்வகித்த எத்தியோப்பிய அதிகாரி* ஒருவர் கடவுளை வணங்குவதற்காக எருசலேமுக்குப் போய்விட்டு,+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்