உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 28:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 ஆனால், இன்று நான் கொடுக்கிற கட்டளைகளையும் சட்டதிட்டங்களையும் கவனமாகக் கடைப்பிடிக்காமலும், உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடக்காமலும் இருந்தால் இந்த எல்லா சாபங்களும் உங்கள்மேல் வந்து குவியும்:+

  • உபாகமம் 28:36
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 36 உங்களுக்கோ உங்கள் முன்னோர்களுக்கோ தெரியாத தேசத்துக்கு உங்களையும் உங்கள் ராஜாவையும் யெகோவா துரத்தியடிப்பார்.+ அங்கே மரத்தாலும் கல்லாலும் உருவாக்கப்பட்ட பொய் தெய்வங்களை வணங்குவீர்கள்.+

  • 2 ராஜாக்கள் 17:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 ஓசெயா ஆட்சி செய்த ஒன்பதாம் வருஷத்தில், சமாரியாவை அசீரிய ராஜா கைப்பற்றினான்.+ பின்பு, இஸ்ரவேல் மக்களை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போய்+ ஆலாவிலும் கோசான் ஆற்றுக்குப்+ பக்கத்திலிருந்த ஆபோரிலும் மேதியர்களுடைய நகரங்களிலும் குடியேற்றினான்.+

  • 2 ராஜாக்கள் 25:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 காமாத் பகுதியிலிருந்த+ ரிப்லாவில் பாபிலோன் ராஜா இவர்களை வெட்டிக் கொன்றான். இப்படி, யூதா மக்கள் தங்களுடைய தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டுப் போனார்கள்.+

  • 2 நாளாகமம் 6:36-39
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 36 ஒருவேளை, அவர்கள் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்யும்போது (பாவம் செய்யாத மனிதன் யாருமில்லையே)+ நீங்கள் பயங்கர கோபம்கொண்டு எதிரியின் கையில் அவர்களைச் சிக்க வைத்தால், பக்கத்திலோ தூரத்திலோ இருக்கிற தேசத்துக்கு அவர்கள் பிடித்துக்கொண்டு போகப்பட்டால்,+ 37 அந்தத் தேசத்தில் இருக்கும்போது அவர்களுக்குப் புத்திவந்து, ‘நாங்கள் பாவம் செய்துவிட்டோம், தப்பு செய்துவிட்டோம், மோசமாக நடந்துவிட்டோம்’ என்று சொல்லி உங்களிடம் திரும்பி வந்தால், கருணை கேட்டுக் கெஞ்சினால்,+ 38 தங்களைப் பிடித்துக்கொண்டு போன எதிரிகளின் தேசத்தில் இருக்கும்போது+ முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் உங்களிடம் திரும்பி வந்தால்,+ முன்னோர்களுக்கு நீங்கள் கொடுத்த தேசத்தையும் நீங்கள் தேர்ந்தெடுத்த நகரத்தையும் உங்கள் பெயருக்காக நான் கட்டிய இந்த ஆலயத்தையும் நோக்கி ஜெபம் செய்தால்,+ 39 அவர்கள் செய்கிற ஜெபத்தையும் கருணை காட்டச் சொல்லி உங்களிடம் செய்கிற மன்றாட்டையும் நீங்கள் குடியிருக்கிற பரலோகத்திலிருந்து கேட்டு அவர்களுக்கு நீதி வழங்குங்கள்.+ உங்களுக்கு எதிராகப் பாவம் செய்த உங்களுடைய மக்களை மன்னியுங்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்