-
1 ராஜாக்கள் 8:46-50பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
46 ஒருவேளை, அவர்கள் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்யும்போது (பாவம் செய்யாத மனிதன் யாருமில்லையே)+ நீங்கள் பயங்கர கோபம்கொண்டு எதிரியின் கையில் அவர்களைச் சிக்க வைத்தால், பக்கத்திலோ தூரத்திலோ இருக்கிற எதிரி தேசத்துக்கு அவர்கள் பிடித்துக்கொண்டு போகப்பட்டால்,+ 47 அந்தத் தேசத்தில் இருக்கும்போது அவர்களுக்குப் புத்திவந்து,+ ‘நாங்கள் பாவம் செய்துவிட்டோம், தப்பு செய்துவிட்டோம், மோசமாக நடந்துவிட்டோம்’+ என்று சொல்லி உங்களிடம் திரும்பி வந்தால்,+ கருணை கேட்டுக் கெஞ்சினால்,+ 48 தங்களைப் பிடித்துக்கொண்டு போன எதிரிகளின் தேசத்தில் இருக்கும்போது முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் உங்களிடம் திரும்பி வந்தால்,+ முன்னோர்களுக்கு நீங்கள் கொடுத்த தேசத்தையும் நீங்கள் தேர்ந்தெடுத்த நகரத்தையும் உங்கள் பெயருக்காக நான் கட்டிய இந்த ஆலயத்தையும் நோக்கி ஜெபம் செய்தால்,+ 49 அவர்கள் செய்கிற ஜெபத்தையும் கருணை காட்டச் சொல்லி உங்களிடம் செய்கிற மன்றாட்டையும் நீங்கள் குடியிருக்கிற பரலோகத்திலிருந்து+ கேட்டு அவர்களுக்கு நீதி வழங்குங்கள். 50 உங்களுக்கு எதிராகப் பாவம் செய்த உங்களுடைய மக்களை மன்னியுங்கள். உங்களுக்கு விரோதமாக அவர்கள் செய்த எல்லா குற்றங்களையும் மன்னியுங்கள். அவர்களைப் பிடித்துக்கொண்டு போனவர்கள் அவர்களுக்குக் கருணை காட்டும்படி செய்யுங்கள், அப்போது உங்கள் மக்களுக்கு அவர்கள் கருணை காட்டுவார்கள்+
-