உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 16:30, 31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 உம்ரியின் மகனான ஆகாப் யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்துவந்தார். அவருக்கு முன்பிருந்த ராஜாக்கள் எல்லாரையும்விட படுமோசமானவராக இருந்தார்.+ 31 நேபாத்தின் மகனான யெரொபெயாம் செய்த பாவங்களை+ இவரும் செய்தார். இது போதாதென்று, சீதோனியர்களின்+ ராஜாவாகிய ஏத்பாகாலின் மகளான யேசபேலைக்+ கல்யாணம் செய்தார், பாகாலுக்கு முன்னால் தலைவணங்கி, அதற்குச் சேவை செய்ய ஆரம்பித்தார்.+

  • 2 ராஜாக்கள் 3:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 யோசபாத் ராஜா யூதாவை ஆட்சி செய்த 18-ஆம் வருஷத்தில், ஆகாபின் மகன் யோராம்+ சமாரியாவில் ராஜாவானார். அவர் இஸ்ரவேலை 12 வருஷங்கள் ஆட்சி செய்தார்.

  • 2 ராஜாக்கள் 3:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 இருந்தாலும், இஸ்ரவேலர்களைப் பாவம் செய்யத் தூண்டிய நேபாத்தின் மகனான யெரொபெயாமின் பாவ வழியைவிட்டு விலகவே இல்லை,+ விடாப்பிடியாக அந்தக் கெட்ட வழியிலேயே நடந்தார்.

  • 2 ராஜாக்கள் 10:31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 ஆனால், இஸ்ரவேலின் கடவுளான யெகோவா கொடுத்த திருச்சட்டத்துக்கு யெகூ முழு இதயத்தோடு கீழ்ப்படிந்து நடக்கவில்லை,+ அதற்குக் கவனம் செலுத்தவில்லை. இஸ்ரவேலர்களைப் பாவம் செய்யத் தூண்டிய யெரொபெயாமின் பாவ வழியைவிட்டு விலகவில்லை.+

  • 2 ராஜாக்கள் 13:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 யூதாவின் ராஜா அகசியாவுடைய+ மகன் யோவாஸ்+ ஆட்சி செய்த 23-ஆம் வருஷத்தில், யெகூவின் மகன் யோவாகாஸ்+ சமாரியாவில் ராஜாவானார். அவர் 17 வருஷங்கள் இஸ்ரவேலை ஆட்சி செய்தார். 2 யெகோவா வெறுக்கிற காரியங்களைத் தொடர்ந்து செய்துவந்தார். இஸ்ரவேலர்களைப் பாவம் செய்யத் தூண்டிய நேபாத்தின் மகன் யெரொபெயாமுடைய பாவ வழியைவிட்டு விலகவே இல்லை,+ விடாப்பிடியாக அந்தக் கெட்ட வழியிலேயே நடந்தார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்