-
உபாகமம் 12:2, 3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 நீங்கள் கைப்பற்றுகிற தேசத்தார் அவர்களுடைய தெய்வங்களை எங்கே வணங்கியிருந்தாலும் சரி, அந்த இடங்களை நீங்கள் அழித்துவிட வேண்டும்.+ உயர்ந்த மலைகளிலோ குன்றுகளிலோ அடர்த்தியான மரங்களின் கீழோ இருக்கிற அந்த இடங்களில் எதையுமே நீங்கள் விட்டுவைக்கக் கூடாது. 3 அவர்களுடைய பலிபீடங்களை இடித்துப்போட வேண்டும், பூஜைத் தூண்களைத் தகர்த்துப்போட வேண்டும்,+ பூஜைக் கம்பங்களை* எரித்துப்போட வேண்டும், தெய்வச் சிலைகளை உடைத்துப்போட வேண்டும்.+ அந்தத் தெய்வங்களின் பெயர்களைக்கூட அங்கிருந்து அழித்துவிட வேண்டும்.+
-