-
2 ராஜாக்கள் 17:10-12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 ஒவ்வொரு குன்றின் மேலும் அடர்த்தியான ஒவ்வொரு மரத்தின் கீழும்+ பூஜைத் தூண்களையும் பூஜைக் கம்பங்களையும்* நிறுத்திவந்தார்கள்.+ 11 இஸ்ரவேலர்களின் கண் முன்னால் யெகோவா துரத்தியடித்த தேசத்தாரைப் போலவே எல்லா ஆராதனை மேடுகளிலும் பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்தார்கள்.+ மோசமான காரியங்களைச் செய்து யெகோவாவைப் புண்படுத்திக்கொண்டே இருந்தார்கள்.
12 “நீங்கள் இப்படிச் செய்யக் கூடாது”+ என்று யெகோவா ஏற்கெனவே சொல்லியிருந்தபோதிலும், இஸ்ரவேலர்கள் அருவருப்பான* சிலைகளை+ வணங்கிவந்தார்கள்.
-
-
எசேக்கியேல் 20:28பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
28 நான் அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்குறுதி தந்த தேசத்துக்கு அவர்களைக் கூட்டிக்கொண்டு வந்தேன்.+ ஆனால், உயரமான குன்றுகளையும் அடர்த்தியான மரங்களையும்+ பார்த்தவுடன் அவர்கள் அருவருப்பான காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அங்கே வாசனையுள்ள பலிகளையும் திராட்சமது காணிக்கையையும் அவர்கள் செலுத்தினார்கள்.
-