-
1 ராஜாக்கள் 12:28-30பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
28 அதனால் தன்னுடைய ஆலோசகர்களுடன் கலந்துபேசி, இரண்டு தங்கக் கன்றுக்குட்டிகளைச் செய்தார்.+ பின்பு மக்களிடம், “இஸ்ரவேலர்களே, எருசலேமுக்குப் போய் வருவது உங்களுக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கும். இதோ! உங்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டுவந்த உங்கள் கடவுள்”+ என்று சொன்னார். 29 அவற்றில் ஒன்றை பெத்தேலிலும்+ மற்றொன்றை தாணிலும்+ வைத்தார். 30 மக்கள் பாவக்குழியில் விழுவதற்கு இது காரணமானது.+ தாணில் இருந்த கன்றுக்குட்டியை வழிபட மக்கள் அவ்வளவு தூரம் பயணம் செய்தார்கள்.
-
-
1 ராஜாக்கள் 21:25, 26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 உன் மனைவி யேசபேலின்+ பேச்சைக் கேட்டு, யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்தே தீருவேன் என்று உறுதியாக இருந்தாய். சொல்லப்போனால், வேறெந்த ராஜாவும் உன்னைப் போல மோசமாக நடந்துகொள்ளவில்லை.+ 26 இஸ்ரவேலர்களுக்கு முன்னால் யெகோவா விரட்டியடித்த+ எமோரியர்களைப் போலவே அருவருப்பான* சிலைகளை வணங்கி, மிகவும் கேவலமாய் நடந்துகொண்டாய்’ என்று சொல்கிறார்” என்றார்.
-