-
1 ராஜாக்கள் 7:51பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
51 இப்படி, யெகோவாவின் ஆலயத்துக்காகச் செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் சாலொமோன் ராஜா செய்து முடித்தார். பின்பு, கடவுளுக்காகத் தன்னுடைய அப்பா தாவீது அர்ப்பணித்திருந்த பொருள்களை+ ஆலயத்துக்குக் கொண்டுவந்தார். வெள்ளியையும் தங்கத்தையும் மற்ற பொருள்களையும் யெகோவாவின் ஆலயத்திலிருந்த பொக்கிஷ அறைகளில் வைத்தார்.+
-
-
2 ராஜாக்கள் 18:14, 15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 அதனால், லாகீசில் இருந்த அசீரிய ராஜாவான சனகெரிப்புக்கு எசேக்கியா ராஜா செய்தி அனுப்பினார்; “நான் தவறு செய்துவிட்டேன். நீங்கள் என்ன கேட்டாலும் தந்துவிடுகிறேன், எங்களைத் தாக்காமல் திரும்பிப் போய்விடுங்கள்” என்று சொன்னார். அப்போது, யூதாவின் ராஜாவான எசேக்கியாவிடம், 300 தாலந்து* வெள்ளியையும் 30 தாலந்து தங்கத்தையும் அபராதம் கட்டச் சொல்லி அசீரிய ராஜா சொன்னான். 15 அதனால், யெகோவாவின் ஆலயத்திலும் அரண்மனை கஜானாக்களிலும் இருந்த எல்லா வெள்ளியையும் எடுத்து எசேக்கியா கொடுத்து அனுப்பினார்.+
-
-
2 ராஜாக்கள் 24:12, 13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 யூதாவின் ராஜாவான யோயாக்கீன் தன்னுடைய அம்மாவையும் ஊழியர்களையும் உயர் அதிகாரிகளையும்* அரண்மனை அதிகாரிகளையும்+ கூட்டிக்கொண்டு பாபிலோன் ராஜாவிடம் போனார்.+ பாபிலோன் ராஜா தான் ஆட்சி செய்த எட்டாம் வருஷத்தில் அவரைக் கைதியாகப் பிடித்துக்கொண்டு போனான்.+ 13 பின்பு, யெகோவாவின் ஆலயத்திலும் ராஜாவின் அரண்மனையிலும் இருந்த எல்லா பொக்கிஷங்களையும் எடுத்துக்கொண்டான்.+ யெகோவாவின் ஆலயத்தில் இஸ்ரவேலின் ராஜாவான சாலொமோன் செய்து வைத்திருந்த தங்கச் சாமான்கள்+ எல்லாவற்றையும் நொறுக்கிப்போட்டான். யெகோவா சொன்னபடியே இது நடந்தது.
-