-
2 ராஜாக்கள் 12:18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 உடனே, யூதாவின் ராஜாவான யோவாஸ் யெகோவாவுடைய ஆலயத்தின் பொக்கிஷ அறைகளிலும் அரண்மனை கஜானாக்களிலும் இருந்த எல்லா தங்கத்தையும் எடுத்து சீரியாவின் ராஜாவான அசகேலுக்கு அனுப்பி வைத்தார். அதோடு, தன்னுடைய முன்னோர்களும் யூதாவின் ராஜாக்களுமான யோசபாத், யோராம், அகசியா ஆகியோர் கடவுளுக்கு அர்ப்பணித்திருந்த* எல்லா பொருள்களையும், தான் கடவுளுக்கு அர்ப்பணித்திருந்த பொருள்களையும் அனுப்பி வைத்தார்.+ அதனால், எருசலேமைத் தாக்காமல் அசகேல் திரும்பிப் போனான்.
-
-
2 நாளாகமம் 16:2, 3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 உடனே ஆசா, யெகோவாவின் ஆலயத்திலுள்ள பொக்கிஷ அறைகளிலும்+ அரண்மனை கஜானாக்களிலும் இருந்த வெள்ளியையும் தங்கத்தையும் எடுத்து, தமஸ்குவில் குடியிருந்த சீரியா ராஜாவான பெனாதாத்துக்கு+ அனுப்பி வைத்தார். 3 அப்படி அனுப்பி வைக்கும்போது, “என் அப்பாவும் உங்கள் அப்பாவும் செய்ததுபோல, நானும் நீங்களும் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். அதனால், நான் அனுப்பியிருக்கிற தங்கத்தையும் வெள்ளியையும் ஏற்றுக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவான பாஷாவோடு நீங்கள் செய்திருக்கிற ஒப்பந்தத்தை ரத்து செய்யுங்கள். அப்படிச் செய்தால், அவர் எங்களைவிட்டுப் பின்வாங்கிப் போய்விடுவார்” என்று சொல்லச் சொன்னார்.
-