உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 17:15, 16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அவள் போய் எலியா சொன்னபடியே செய்தாள். அதனால், அவளுடைய குடும்பத்தாரும் எலியாவும் பல நாட்களுக்குச் சாப்பிட்டார்கள்.+ 16 எலியா மூலம் யெகோவா சொன்னபடியே, பெரிய ஜாடியில் இருந்த மாவும் குறையவில்லை, சின்ன ஜாடியில் இருந்த எண்ணெயும் தீர்ந்துபோகவில்லை.

  • 1 ராஜாக்கள் 17:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 எலியா செய்த ஜெபத்தை யெகோவா கேட்டார்.+ அந்தப் பையனுக்கு உயிர் வந்தது, அவன் பிழைத்துக்கொண்டான்.+

  • 1 ராஜாக்கள் 17:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 அப்போது அந்தப் பெண், “நிஜமாகவே நீங்கள் கடவுள் அனுப்பிய தீர்க்கதரிசிதான்,+ உங்கள் மூலம் யெகோவா சொல்கிற வார்த்தையெல்லாம் உண்மை என்பதை இப்போது புரிந்துகொண்டேன்” என்று சொன்னாள்.

  • 1 ராஜாக்கள் 18:36
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 36 மாலையில் உணவுக் காணிக்கை செலுத்துகிற நேரத்தில்,+ பலிபீடத்துக்குப் பக்கத்தில் எலியா தீர்க்கதரிசி வந்து, “யெகோவாவே, ஆபிரகாம்,+ ஈசாக்கு,+ இஸ்ரவேல் ஆகியோரின் தேவனே, நீங்கள்தான் இஸ்ரவேலின் கடவுள் என்பதையும், நான் உங்களுடைய ஊழியன் என்பதையும், நீங்கள் சொல்லித்தான் இவை எல்லாவற்றையும் செய்தேன்+ என்பதையும் இன்று எல்லாருக்கும் தெரியப்படுத்துங்கள்.

  • 1 ராஜாக்கள் 18:38
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 38 உடனடியாக, யெகோவா அனுப்பிய நெருப்பு வானத்திலிருந்து வந்து, தகன பலியையும் விறகுகளையும் கற்களையும் மண்ணையும் சுட்டெரித்தது.+ வாய்க்காலில் இருந்த தண்ணீரையும் உறிஞ்சியது.+

  • 1 ராஜாக்கள் 18:46
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 46 எலியாவுக்கு யெகோவா விசேஷ பலத்தைக் கொடுத்ததால்,* அவர் தன்னுடைய அங்கியை இடுப்பில் இழுத்துக் கட்டிக்கொண்டு ஆகாபுக்கு முன்னால் ஓடி யெஸ்ரயேலை அடைந்தார்.

  • 2 ராஜாக்கள் 2:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 பின்பு எலியா தன்னுடைய அங்கியை* கழற்றி,+ அதைச் சுருட்டி ஆற்றுத் தண்ணீரை அடித்தார். உடனே தண்ணீர் இரண்டாகப் பிரிந்தது. அவர்கள் இரண்டு பேரும் வறண்ட தரையில் நடந்து ஆற்றைக் கடந்தார்கள்.+

  • 2 ராஜாக்கள் 2:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அவர்கள் பேசிக்கொண்டே நடந்து போனபோது, திடீரென்று அவர்களுக்கு இடையே ஒரு ரதமும் குதிரைகளும்+ வந்தன; அவை நெருப்பைப் போல் தகதகவென்று பிரகாசித்தன. எலியா சுழல்காற்றில் வானத்துக்குக் கொண்டுபோகப்பட்டார்.+

  • லூக்கா 1:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 அதோடு, கடவுளுக்கு முன்னே போய், எலியாவுக்கு இருந்த அதே ஆர்வத்துடிப்போடும் வல்லமையோடும் செயல்படுவான்;+ தகப்பன்களின் உள்ளத்தைப் பிள்ளைகளுடைய உள்ளத்தைப் போல மாற்றுவான்;*+ கீழ்ப்படியாதவர்களைத் திருத்தி நீதிமான்களைப் போல் ஞானமாக நடப்பதற்கு உதவி செய்வான்; இப்படி, யெகோவாவுக்கு* ஏற்ற ஒரு ஜனத்தைத் தயார்படுத்துவான்”+ என்று சொன்னார்.

  • யோவான் 1:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 யூதர்கள் எருசலேமிலிருந்து ஆலய குருமார்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, “நீ யார்?”+ என்று கேட்டபோது,

  • யோவான் 1:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 அதற்கு அவர்கள், “அப்படியானால், நீ எலியாவா?”+ என்று கேட்டார்கள். அப்போது அவர், “இல்லை” என்று சொன்னார். “நீதான் வரவேண்டிய தீர்க்கதரிசியா?”+ என்று கேட்டார்கள். அதற்கும் அவர், “இல்லை!” என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்