உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 29:24, 25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 அவர்களும் எல்லா தேசத்தாரும், ‘இந்தத் தேசத்தை யெகோவா ஏன் அழித்துப்போட்டார்?+ அவருடைய கோபம் இந்தளவு பற்றியெரிந்ததற்குக் காரணம் என்ன?’ என்று கேட்பார்கள். 25 அதற்கு ஜனங்கள், ‘அவர்களுடைய முன்னோர்களின் கடவுளாகிய யெகோவா அவர்களை எகிப்து தேசத்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தபோது செய்த ஒப்பந்தத்தை+ அவர்கள் மீறிவிட்டார்கள்.+

  • நியாயாதிபதிகள் 2:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 கடைசியில், இஸ்ரவேலர்கள்மேல் யெகோவாவின் கோபம் பற்றியெரிந்தது.+ அதனால் அவர், “இந்த ஜனங்கள் அவர்களுடைய முன்னோர்களுடன் நான் செய்த ஒப்பந்தத்தை+ மீறி, எனக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள்.+

  • 1 ராஜாக்கள் 8:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 மோசே ஓரேபில் இருந்தபோது வைத்த+ இரண்டு கற்பலகைகளைத்+ தவிர வேறெதுவும் அந்தப் பெட்டியில் இருக்கவில்லை. எகிப்து தேசத்திலிருந்து வந்த+ இஸ்ரவேலர்களோடு ஓரேபில் யெகோவா ஒப்பந்தம் செய்த+ சமயத்தில் இந்தக் கற்பலகைகள் அதில் வைக்கப்பட்டன.

  • 2 ராஜாக்கள் 17:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அவருடைய விதிமுறைகளை ஒதுக்கித்தள்ளிக்கொண்டே இருந்தார்கள்.+ தங்களுடைய முன்னோர்களோடு அவர் செய்த ஒப்பந்தத்தையும் மீறிக்கொண்டே இருந்தார்கள். அவர் திரும்பத் திரும்பத் தங்களை எச்சரித்தபோதிலும் அதை அலட்சியம் செய்துகொண்டே இருந்தார்கள்.+ ஒன்றுக்கும் உதவாத சிலைகளை வணங்கிவந்தார்கள்,+ கடைசியில் அவர்களும் ஒன்றுக்கும் உதவாதவர்களாய் ஆனார்கள்.+ சுற்றியிருந்த தேசத்தாரைப் பின்பற்ற வேண்டாமென்று யெகோவா கட்டளையிட்டிருந்தும், அவர்களைப் பின்பற்றினார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்