9 பின்பு, சீயோன் கோட்டையில் தாவீது குடியேறினார். அது ‘தாவீதின் நகரம்’ என்று அழைக்கப்பட்டது.* பின்பு, மில்லோவை*+ சுற்றிலும் நகரத்தின் மற்ற இடங்களிலும் மதில்களையும் மற்ற கட்டிடங்களையும் தாவீது கட்டினார்.+
15 யெகோவாவின் ஆலயம்,+ தன்னுடைய அரண்மனை, மில்லோ,*+ எருசலேம் மதில், ஆத்சோர்,+ மெகிதோ,+ கேசேர்+ ஆகியவற்றைக் கட்டுவதற்காக சாலொமோன் ராஜா ஆட்களை அடிமைப்படுத்தி வேலை வாங்கினார்.+
5 எசேக்கியா மன உறுதியோடு செயல்பட்டார். இடிந்து கிடந்த மதில் முழுவதையும் திரும்பக் கட்டினார், அதன்மேல் கோபுரங்களைக் கட்டினார். அந்த மதிலுக்கு வெளியே இன்னொரு மதிலையும் கட்டினார். ‘தாவீதின் நகரத்தில்’ இருந்த மில்லோவையும்*+ பழுதுபார்த்தார். ஏராளமான ஆயுதங்களையும் கேடயங்களையும் செய்தார்.