32எசேக்கியா இவை எல்லாவற்றையும் உண்மையுடன் செய்து முடித்தார்.+ அதன் பின்பு, யூதா தேசத்தின் மீது அசீரிய ராஜா சனகெரிப் படையெடுத்து வந்து மதில் சூழ்ந்த நகரங்களை முற்றுகையிட்டான், மதில்களை உடைத்து அவற்றைக் கைப்பற்ற வேண்டும் என்று குறியாக இருந்தான்.+
36எசேக்கியா ராஜா ஆட்சி செய்த 14-ஆம் வருஷத்தில், யூதாவிலிருந்த மதில் சூழ்ந்த நகரங்கள் எல்லாவற்றின் மேலும் அசீரிய ராஜா சனகெரிப்+ படையெடுத்து வந்து அவற்றைக் கைப்பற்றினான்.+