-
2 ராஜாக்கள் 21:11, 12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 “யூதாவின் ராஜா மனாசே இந்த அருவருப்பான காரியங்களையெல்லாம் செய்திருக்கிறான். அவனுக்கு முன்பிருந்த எமோரியர்கள்+ எல்லாரையும்விட படுமோசமான காரியங்களைச் செய்திருக்கிறான்.+ அருவருப்பான* சிலைகளை நிறுத்தி யூதா மக்களைப் பாவம் செய்ய வைத்திருக்கிறான். 12 அதனால், இஸ்ரவேலின் கடவுளான யெகோவா சொல்வது என்னவென்றால், ‘எருசலேம்மீதும் யூதாமீதும் பயங்கரமான அழிவைக் கொண்டுவரப்போகிறேன்.+ அதைப் பற்றிக் கேள்விப்படுகிறவர்கள் எல்லாரும் அதிர்ச்சியடைவார்கள்.*+
-
-
2 ராஜாக்கள் 24:3, 4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 இதெல்லாம் யெகோவாவின் கட்டளைப்படிதான் நடந்தது; யூதா மக்களைத் தன்னுடைய கண் முன்னாலிருந்து நீக்குவதற்காகத்தான் இப்படிச் செய்தார்.+ ஏனென்றால் மனாசே நிறைய பாவங்கள் செய்திருந்தார்;+ 4 அப்பாவி மக்களைக் கொன்று குவித்திருந்தார்;+ அப்பாவிகளின் இரத்தத்தால் எருசலேமை நிரப்பியிருந்தார். யெகோவா இதையெல்லாம் மன்னிக்கத் தயாராக இல்லை.+
-