16 யூதா மக்கள் யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்வதற்கு மனாசே காரணமாக இருந்தார்; அதுமட்டுமல்லாமல், எருசலேமின் ஓர் எல்லைமுதல் மறு எல்லைவரை ஏராளமான அப்பாவி மக்களைக் கொன்று குவித்தார்.*+
4 ஏனென்றால், நீங்கள் என்னை விட்டுவிட்டு,+ உங்களுக்கும் உங்களுடைய முன்னோர்களுக்கும் யூதாவின் ராஜாக்களுக்கும் தெரியாத பொய் தெய்வங்களுக்கு இங்கே பலி செலுத்துகிறீர்கள். அப்பாவிகளை இங்கே கொன்று குவிக்கிறீர்கள்.+ இந்த இடத்தை அடையாளம் தெரியாதபடி மாற்றிவிட்டீர்கள்.+