-
ஏசாயா 59:7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
அவர்கள் எப்போதும் கெட்டதையே யோசிக்கிறார்கள்.
எப்போதுமே மற்றவர்களுக்குக் கெடுதல் செய்கிறார்கள், கஷ்டம் கொடுக்கிறார்கள்.+
-
-
மத்தேயு 23:34, 35பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
34 இதற்காகத்தான் தீர்க்கதரிசிகளையும்+ ஞானிகளையும் போதகர்களையும்+ உங்களிடம் அனுப்புகிறேன். அவர்களில் சிலரை நீங்கள் கொலை செய்வீர்கள்,+ மரக் கம்பங்களில்* அறைவீர்கள், உங்கள் ஜெபக்கூடங்களில் முள்சாட்டையால் அடிப்பீர்கள்,+ நகரத்துக்கு நகரம் போய்த் துன்புறுத்துவீர்கள்.+ 35 இதனால், நீதிமானாகிய ஆபேலின் இரத்தம்முதல்,+ பரகியாவின் மகனும் பரிசுத்த இடத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலை செய்தவருமான சகரியாவின் இரத்தம்வரை, உலகத்தில் கொல்லப்பட்ட எல்லா நீதிமான்களுடைய கொலைப்பழிக்கும்* நீங்கள் ஆளாவீர்கள்.+
-