உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 12:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 பின்பு அவர், “உங்கள் முன்னோர்களின் கடவுளாகிய யெகோவா தருகிற தேசத்தில் நீங்கள் வாழும் காலமெல்லாம் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளும் நீதித்தீர்ப்புகளும் இவைதான்.

  • உபாகமம் 17:18, 19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 அவர் ராஜாவாக ஆட்சி செய்ய ஆரம்பிக்கும்போது, லேவியர்களான குருமார்களிடம் உள்ள திருச்சட்ட புத்தகத்தை*+ பார்த்து தனக்காக ஒரு நகலை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.

      19 அதை அவர் எப்போதும் வைத்திருக்க வேண்டும். தன்னுடைய வாழ்நாளெல்லாம் அதை வாசிக்க வேண்டும்.+ அப்போதுதான், தன் கடவுளாகிய யெகோவாவுக்குப் பயந்து நடக்கக் கற்றுக்கொள்வார், திருச்சட்டத்திலுள்ள எல்லா வார்த்தைகளையும் விதிமுறைகளையும் கடைப்பிடிப்பார்.+

  • யோசுவா 1:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 இந்தத் திருச்சட்ட புத்தகத்தில் உள்ள விஷயங்களைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டே இரு.+ அதில் எழுதியிருக்கிற எல்லாவற்றையும் கவனமாய்க் கடைப்பிடிப்பதற்காக ராத்திரியும் பகலும் தாழ்ந்த குரலில் அதை வாசி.*+ அப்போதுதான் வாழ்க்கையில் உனக்கு வெற்றி கிடைக்கும், நீ ஞானமாகவும் நடப்பாய்.+

  • 1 ராஜாக்கள் 2:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 உன்னுடைய கடவுளான யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்; மோசேயின் திருச்சட்டத்திலுள்ள சட்டதிட்டங்களையும் கட்டளைகளையும் நீதித்தீர்ப்புகளையும் நினைப்பூட்டுதல்களையும் அப்படியே கடைப்பிடிக்க வேண்டும்.+ அப்போது, நீ எதைச் செய்தாலும், எங்கே போனாலும் உனக்கு வெற்றி கிடைக்கும்.*

  • 1 நாளாகமம் 28:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 என் கட்டளைகளையும் நீதித்தீர்ப்புகளையும் இன்று போலவே என்றும் அவன் உறுதியாகக் கடைப்பிடித்தால்+ அவனுடைய ஆட்சியை என்றென்றைக்கும் நிலைக்க வைப்பேன்’+ என்று சொன்னார்.

  • சங்கீதம் 19:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 யெகோவாவின் ஆணைகள் நீதியானவை, அவை இதயத்துக்குச் சந்தோஷத்தைத் தருகின்றன.+

      யெகோவாவின் கட்டளைகள் தூய்மையானவை, அவை கண்களைப் பிரகாசிக்க வைக்கின்றன.+

  • சங்கீதம் 19:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அவை உங்களுடைய ஊழியனை எச்சரிக்கின்றன.+

      அவற்றின்படி நடக்கும்போது மிகுந்த பலன் கிடைக்கிறது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்