-
2 சாமுவேல் 23:20-23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 யோய்தாவின் மகன் பெனாயா+ அஞ்சாநெஞ்சம் உள்ளவர். கப்செயேலில்+ வீரச்செயல்கள் பலவற்றைச் செய்திருந்தார். மோவாபியனான அரியேலின் இரண்டு மகன்களைக் கொன்றுபோட்டார். ஒருநாள், பனி பெய்துகொண்டிருந்தபோது தண்ணீர்த் தொட்டிக்குள் இறங்கி ஒரு சிங்கத்தைக் கொன்றுபோட்டார்.+ 21 அதோடு, மிக மிக உயரமாக இருந்த ஓர் எகிப்தியனையும் கொன்றுபோட்டார். அந்த எகிப்தியன் கையில் ஈட்டி இருந்தது. ஆனாலும், பெனாயா ஒரு கம்பை எடுத்துக்கொண்டு அவனை எதிர்த்துச் சண்டைபோடப் போனார். அவனுடைய கையிலிருந்த ஈட்டியைப் பிடுங்கி, அந்த ஈட்டியாலேயே அவனைக் குத்திக் கொன்றார். 22 இவையெல்லாம் யோய்தாவின் மகன் பெனாயாவின் செயல்கள். முதல் மூன்று மாவீரர்களைப் போலவே இவரும் புகழ் பெற்றிருந்தார். 23 மாவீரர்கள் 30 பேரைவிட இவர் தனிச்சிறப்பு பெற்றிருந்தார். ஆனால், முதல் மூன்று மாவீரர்களுக்கு இவர் சமமாக இல்லை. ஆனாலும், தாவீது இவரைத் தன்னுடைய மெய்க்காவலர்களுக்குத் தலைவராக நியமித்தார்.
-