உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 7:13, 14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 தீருவிலிருந்து ஈராம்+ என்பவரை சாலொமோன் ராஜா வரவழைத்தார். 14 அவர் நப்தலி கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு விதவையின் மகன்; அவருடைய அப்பா தீருவைச் சேர்ந்த செம்பு ஆசாரி.+ எல்லாவித செம்பு* வேலைகளையும் செய்வதில் மிகுந்த அறிவும் அனுபவமும் திறமையும் ஈராமுக்கு இருந்தது.+ அதனால், சாலொமோன் ராஜாவிடம் வந்து அவர் செய்யச் சொன்ன எல்லா வேலைகளையும் செய்து கொடுத்தார்.

  • 2 நாளாகமம் 4:11-16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 சட்டிகள், சாம்பல் அள்ளும் கரண்டிகள், கிண்ணங்கள் ஆகியவற்றையும் ஈராம் செய்தார்.+

      உண்மைக் கடவுளின் ஆலயத்துக்காக சாலொமோன் ராஜா செய்யச் சொல்லியிருந்த வேலைகளை ஈராம் செய்து முடித்தார்.+ 12 இரண்டு தூண்கள்,+ அவற்றின் உச்சியில் இருந்த கிண்ண வடிவ கும்பங்கள், இரண்டு கும்பங்களையும் அலங்கரித்த இரண்டு வலைப்பின்னல்கள்,+ 13 அந்த இரண்டு வலைப்பின்னல்களிலும் தொங்கவிட 400 மாதுளம்பழ வடிவங்கள் ஆகியவற்றைச் செய்தார்;+ ஒவ்வொரு வலைப்பின்னலிலும் இரண்டு வரிசை மாதுளம்பழ வடிவங்கள் இருந்தன. தூண்களின் உச்சியிலிருந்த இரண்டு கும்பங்களைச் சுற்றிலும் இந்த வலைப்பின்னல்கள் அமைக்கப்பட்டிருந்தன.+ 14 அதோடு, பத்துத் தள்ளுவண்டிகள்,* அவற்றில் வைக்க பத்துத் தொட்டிகள்,+ 15 ‘செம்புக் கடல்’ தொட்டி, அதன் கீழிருந்த 12 காளை உருவங்கள்,+ 16 சட்டிகள், சாம்பல் அள்ளும் கரண்டிகள், முள்கரண்டிகள்,+ மற்ற பாத்திரங்கள் ஆகியவற்றையும் செய்தார். இவை எல்லாவற்றையும் பளபளப்பான செம்பினால் செய்தார். சாலொமோன் ராஜா சொன்னபடியே யெகோவாவின் ஆலயத்துக்காக இவை எல்லாவற்றையும் ஈராம்-அபி*+ செய்தார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்