உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 30:12-16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 “இஸ்ரவேல் ஆண்கள் கணக்கெடுக்கப்படும்+ சமயங்களில், ஒவ்வொருவரும் தங்கள் உயிருக்காக யெகோவாவுக்கு மீட்புவிலையைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான், பெயர்ப்பதிவு செய்யப்படும்போது எந்தத் தண்டனையும் வராது. 13 பெயர்ப்பதிவு செய்யப்படுகிற எல்லாரும் அரை சேக்கல்* கொடுக்க வேண்டும். பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி அதைக் கொடுக்க வேண்டும்.+ ஒரு சேக்கல் என்பது இருபது கேரா.* யெகோவாவுக்காகக் கொடுக்கப்படும் காணிக்கை அரை சேக்கல்.+ 14 பெயர்ப்பதிவு செய்யப்படுகிற எல்லாரும், அதாவது 20 வயதும் அதற்கு அதிகமான வயதும் உள்ள எல்லாரும், யெகோவாவுக்குக் காணிக்கை கொடுக்க வேண்டும்.+ 15 உங்களுடைய உயிரை மீட்பதற்காக* யெகோவாவுக்குக் காணிக்கை செலுத்தும்போது, பணக்காரன் அரை சேக்கலுக்கு* அதிகமாகவும் கொடுக்கக் கூடாது, ஏழை அதற்குக் குறைவாகவும் கொடுக்கக் கூடாது. 16 பாவப் பரிகாரத்துக்காக இஸ்ரவேலர்கள் கொடுக்கிற வெள்ளிக் காசை நீ வசூலித்து சந்திப்புக் கூடாரத்தின் சேவைக்குக் கொடுத்துவிடு. அப்போது யெகோவா அவர்களை நினைத்துப் பார்ப்பார், அவர்களுடைய உயிரும் மீட்கப்படும்” என்றார்.

  • நெகேமியா 10:32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 நாங்கள் ஒவ்வொருவரும் வருஷா வருஷம் எங்கள் கடவுளின் ஆலயச் சேவைக்காக ஒரு சேக்கலில்* மூன்றிலொரு பாகத்தைக் கொடுப்பதாக உறுதிமொழி தருகிறோம்.+

  • மத்தேயு 17:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 அவர்கள் கப்பர்நகூமுக்கு வந்துசேர்ந்ததும், இரண்டு திராக்மா* வரியை வசூலிப்பவர்கள் பேதுருவிடம் வந்து, “உங்கள் போதகர் இரண்டு திராக்மா வரி கட்டுகிறாரா?”+ என்று கேட்டார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்