உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 7:51
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 51 இப்படி, யெகோவாவின் ஆலயத்துக்காகச் செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் சாலொமோன் ராஜா செய்து முடித்தார். பின்பு, கடவுளுக்காகத் தன்னுடைய அப்பா தாவீது அர்ப்பணித்திருந்த பொருள்களை+ ஆலயத்துக்குக் கொண்டுவந்தார். வெள்ளியையும் தங்கத்தையும் மற்ற பொருள்களையும் யெகோவாவின் ஆலயத்திலிருந்த பொக்கிஷ அறைகளில் வைத்தார்.+

  • 1 ராஜாக்கள் 15:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 உடனே ஆசா, யெகோவாவின் ஆலயத்திலுள்ள பொக்கிஷ அறைகளிலும் அரண்மனை கஜானாக்களிலும் மீதியிருந்த எல்லா வெள்ளியையும் தங்கத்தையும் எடுத்து தன்னுடைய ஊழியர்களிடம் கொடுத்தார். அவற்றை தமஸ்குவில் குடியிருந்த சீரியா ராஜாவிடம்,+ அதாவது எசியோனின் பேரனும் தப்ரிமோனின் மகனுமான பெனாதாத்திடம், கொடுக்கச் சொன்னார்.

  • 2 ராஜாக்கள் 24:12, 13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 யூதாவின் ராஜாவான யோயாக்கீன் தன்னுடைய அம்மாவையும் ஊழியர்களையும் உயர் அதிகாரிகளையும்* அரண்மனை அதிகாரிகளையும்+ கூட்டிக்கொண்டு பாபிலோன் ராஜாவிடம் போனார்.+ பாபிலோன் ராஜா தான் ஆட்சி செய்த எட்டாம் வருஷத்தில் அவரைக் கைதியாகப் பிடித்துக்கொண்டு போனான்.+ 13 பின்பு, யெகோவாவின் ஆலயத்திலும் ராஜாவின் அரண்மனையிலும் இருந்த எல்லா பொக்கிஷங்களையும் எடுத்துக்கொண்டான்.+ யெகோவாவின் ஆலயத்தில் இஸ்ரவேலின் ராஜாவான சாலொமோன் செய்து வைத்திருந்த தங்கச் சாமான்கள்+ எல்லாவற்றையும் நொறுக்கிப்போட்டான். யெகோவா சொன்னபடியே இது நடந்தது.

  • 2 ராஜாக்கள் 25:13-15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 கல்தேயர்கள் யெகோவாவின் ஆலயத்திலிருந்த செம்புத் தூண்களையும்+ யெகோவாவின் ஆலயத்திலிருந்த தள்ளுவண்டிகளையும்+ ‘செம்புக் கடல்’ தொட்டியையும்+ உடைத்து, அவற்றின் செம்பை பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.+ 14 சட்டிகள், சாம்பல் அள்ளும் கரண்டிகள், திரி வெட்டும் கருவிகள், கோப்பைகள் ஆகியவற்றையும், ஆலயத்தில் பயன்படுத்தப்பட்ட எல்லா செம்புப் பாத்திரங்களையும் எடுத்துக்கொண்டு போனார்கள். 15 சொக்கத்தங்கத்திலும் வெள்ளியிலும் செய்யப்பட்ட தணல் அள்ளும் கரண்டிகளையும் கிண்ணங்களையும்+ காவலாளிகளின் தலைவன் கொண்டுபோனான்.

  • 2 நாளாகமம் 12:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 எகிப்தின் ராஜாவான சீஷாக் எருசலேம்மீது படையெடுத்து வந்தான்; யெகோவாவின் ஆலயத்தில் இருந்த பொக்கிஷங்களையும்+ அரண்மனையில் இருந்த பொக்கிஷங்களையும் எடுத்துக் கொண்டுபோனான். சாலொமோன் செய்து வைத்திருந்த தங்கக் கேடயங்கள் உட்பட எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டுபோனான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்