-
1 ராஜாக்கள் 7:50பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
50 அதோடு, அண்டாக்கள், திரி வெட்டும் கருவிகள்,+ கிண்ணங்கள், கோப்பைகள்,+ தணல் அள்ளும் கரண்டிகள்+ ஆகியவற்றையும் சுத்தமான தங்கத்தில் செய்தார். கூடுதலாக, உட்புற அறையான மகா பரிசுத்த அறையின்+ கதவுகளுக்காகவும் ஆலயத்தின் கதவுகளுக்காகவும்+ சுழல் அச்சுகளைப் பொருத்துவதற்கான அடிப்பகுதிகளையும் தங்கத்தில் செய்தார்.
-
-
2 நாளாகமம் 24:14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 ஆலய வேலை முடிந்தவுடன், மிச்சமிருந்த பணத்தை ராஜாவிடமும் யோய்தாவிடமும் கொண்டுவந்து கொடுத்தார்கள். அவர்கள் அந்தப் பணத்தை வைத்து யெகோவாவின் ஆலயத்துக்குத் தேவையான சாமான்களைச் செய்தார்கள். ஆலய வேலைக்கும் பலி செலுத்துவதற்கும் தேவையான சாமான்கள், கிண்ணங்கள், வெள்ளிச் சாமான்கள், தங்கச் சாமான்கள் ஆகியவற்றைச் செய்தார்கள்.+ யோய்தா உயிரோடு இருந்தவரை, யெகோவாவின் ஆலயத்தில் தவறாமல் தகன பலிகளைக் கொடுத்துவந்தார்கள்.+
-