உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 31:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 தைரியமாகவும் உறுதியாகவும் இருங்கள்.+ அவர்களைப் பார்த்துப் பயந்து நடுங்காதீர்கள்.+ ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களோடு வருகிறார். அவர் உங்களைவிட்டு விலக மாட்டார், உங்களைக் கைவிடவும் மாட்டார்”+ என்று சொன்னார்.

  • உபாகமம் 31:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 யெகோவா உனக்கு முன்னால் போகிறார், அவர் உன்னோடு இருப்பார்.+ அவர் உன்னைவிட்டு விலக மாட்டார், உன்னைக் கைவிடவும் மாட்டார். அதனால் பயப்படாதே, திகிலடையாதே”+ என்று சொன்னார்.

  • யோசுவா 1:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 நீ தைரியமாகவும் உறுதியாகவும் இரு.+ உங்கள் முன்னோர்களுக்கு நான் வாக்குக் கொடுத்த தேசத்தைச்+ சொந்தமாக்கிக்கொள்ள இவர்களை நீதான் வழிநடத்திக்கொண்டு போவாய்.

  • யோசுவா 1:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 நான் ஏற்கெனவே சொன்னபடி, தைரியமாகவும் உறுதியாகவும் இரு. பயப்படாதே, திகிலடையாதே. நீ போகும் இடமெல்லாம் உன் கடவுளாகிய யெகோவா உன்னோடு இருப்பார்”+ என்று சொன்னார்.

  • 2 ராஜாக்கள் 6:16, 17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 ஆனால் எலிசா, “பயப்படாதே!+ அவர்களோடு இருப்பவர்களைவிட நம்மோடு இருப்பவர்கள்தான் அதிகம்”+ என்று சொன்னார். 17 பின்பு எலிசா, “யெகோவாவே, தயவுசெய்து இவனுடைய கண்களைத் திறங்கள்”+ என்று ஜெபம் செய்தார். உடனே அந்த ஊழியனுடைய கண்களை யெகோவா திறந்தார். அப்போது, நெருப்புபோல் பிரகாசித்த குதிரைகளும் போர் ரதங்களும்+ எலிசா இருந்த மலைப்பகுதி முழுவதையும் சூழ்ந்து நிற்பதை அவன் பார்த்தான்.+

  • 2 நாளாகமம் 20:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அப்போது யகாசியேல் அங்கிருந்த மக்களிடம், “யூதா மக்களே, எருசலேம் மக்களே, யோசபாத் ராஜாவே, நீங்கள் எல்லாரும் கவனமாகக் கேளுங்கள். யெகோவா சொல்வது என்னவென்றால், ‘இந்தப் பெரிய படையைப் பார்த்துப் பயப்படாதீர்கள், திகிலடையாதீர்கள். ஏனென்றால், இது உங்களுடைய போர் அல்ல, கடவுளுடைய போர்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்