உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 24:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 யூதாவின் ராஜாவான யோயாக்கீன் தன்னுடைய அம்மாவையும் ஊழியர்களையும் உயர் அதிகாரிகளையும்* அரண்மனை அதிகாரிகளையும்+ கூட்டிக்கொண்டு பாபிலோன் ராஜாவிடம் போனார்.+ பாபிலோன் ராஜா தான் ஆட்சி செய்த எட்டாம் வருஷத்தில் அவரைக் கைதியாகப் பிடித்துக்கொண்டு போனான்.+

  • 2 ராஜாக்கள் 24:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 எருசலேமில் இருந்த உயர் அதிகாரிகள்,+ மாவீரர்கள், கைத்தொழிலாளிகள், கொல்லர்கள்*+ என எல்லாரையும் சிறைபிடித்துக்கொண்டு போனான்; மொத்தம் 10,000 பேரைக் கொண்டுபோனான். பரம ஏழைகளைத் தவிர வேறு யாரையுமே நகரத்தில் விட்டுவைக்கவில்லை.+

  • 2 நாளாகமம் 36:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 எனவே, கல்தேயர்களின் ராஜாவை அவர்களுக்கு விரோதமாக அனுப்பினார்.+ அவர்களுடைய ஆலயத்திலேயே+ இளைஞர்களை அவன் வாளால் வெட்டிக் கொன்றான்.+ இளைஞர்கள் என்றோ கன்னிப்பெண்கள் என்றோ பார்க்கவில்லை, வயதானவர்கள் என்றோ பலவீனமானவர்கள் என்றோ பரிதாபப்படவில்லை.+ சொல்லப்போனால், எல்லாவற்றையும் கடவுள் அவர்கள் கையில் கொடுத்துவிட்டார்.+

  • 2 நாளாகமம் 36:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 வாளுக்குத் தப்பியவர்களை பாபிலோனுக்குப் பிடித்துக்கொண்டு போனான்.+ பெர்சிய சாம்ராஜ்யத்தின் ஆட்சி ஆரம்பமாகும்வரை+ அவனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் அவர்கள் வேலைக்காரர்களாக இருந்தார்கள்.+

  • எரேமியா 39:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 நகரத்தில் மிச்சமிருந்த ஜனங்களையும், பாபிலோன் ராஜாவிடம் சரணடைந்தவர்களையும், யூதாவிலிருந்த மற்ற ஜனங்களையும் காவலாளிகளின் தலைவனாகிய நேபுசராதான்+ பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போனான்.

  • எரேமியா 52:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 காவலாளிகளின் தலைவன் நேபுசராதான், நகரத்தில் மிச்சமிருந்த பாமர மக்களையும் மற்ற ஜனங்களையும் சிறைபிடித்துக்கொண்டு போனான். அதோடு, பாபிலோன் ராஜாவிடம் சரணடைந்தவர்களையும், திறமையான கைத்தொழிலாளிகளையும் கொண்டுபோனான்.+

  • எரேமியா 52:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துக்கொண்டு போனவர்களின் விவரம் இதுதான்: நேபுகாத்நேச்சார் ஆட்சி செய்த ஏழாம் வருஷத்தில் 3,023 யூதர்கள் சிறைபிடிக்கப்பட்டுப் போனார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்