3 அவனுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த அம்மோனியனான+ தொபியா,+ “ஏதோ மதில் கட்டுகிறார்களாம், ஒரு குள்ளநரி ஏறினால்கூட அது பொலபொலவென்று இடிந்து விழுந்துவிடும்” என்று சொன்னான்.
14 “என் கடவுளே, தொபியாவும்+ சன்பல்லாத்தும் செய்கிற அநியாயங்களைப் பாருங்கள். நொவதியாளும் மற்ற தீர்க்கதரிசிகளும்கூட என்னை எப்போதும் மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள், அவர்களைச் சும்மா விடாதீர்கள்” என்று நான் ஜெபம் செய்தேன்.
7 மறுபடியும் எருசலேமுக்கு வந்தேன். அப்போது எலியாசிப்+ செய்திருந்த ஒரு பெரிய அநியாயத்தைப் பார்த்தேன். உண்மைக் கடவுளின் ஆலயப் பிரகாரத்திலுள்ள சேமிப்பு* அறை ஒன்றை அவர் தொபியாவுக்குக்+ கொடுத்திருந்தார்.