-
நெகேமியா 10:37, 38பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
37 எங்களுடைய முதல் விளைச்சலின் முதல் மாவு,*+ காணிக்கைகள், எல்லா வகையான மரங்களின் பழங்கள்,+ புதிய திராட்சமது, எண்ணெய்+ ஆகியவற்றை எங்கள் கடவுளுடைய ஆலயத்தின் சேமிப்பு* அறைகளுக்கு+ எடுத்து வருவோம். அதுமட்டுமல்லாமல், எங்களுடைய எல்லா வேளாண்மை நகரங்களிலிருந்தும் பத்திலொரு பாகத்தைச் சேகரிக்கிற லேவியர்களுக்காக+ எங்களுடைய நிலத்தின் விளைச்சலிலிருந்து பத்திலொரு பாகத்தைக் கொண்டுவருவோம்.
38 லேவியர்கள் பத்திலொரு பாகத்தைச் சேகரிக்கும்போது ஆரோனின் வம்சத்தைச் சேர்ந்த குருமார்கள் அவர்களோடு இருப்பார்கள். லேவியர்கள் அந்தப் பத்திலொரு பாகத்திலிருந்து பத்திலொரு பாகத்தை எடுத்து கடவுளுடைய ஆலயத்தின்+ சேமிப்பு* அறைகளில் வைப்பார்கள்.
-