உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 22:18, 19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 ஆனால், யெகோவாவிடம் விசாரிக்கச் சொல்லி உங்களை அனுப்பிய யூதா ராஜாவிடம் போய் இதைச் சொல்லுங்கள்: “நீ கேட்ட வார்த்தைகளைப் பற்றி இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: 19 ‘இந்த இடத்துக்கும் இந்தக் குடிமக்களுக்கும் எதிராக நான் சொன்னதைக் கேட்டு நீ மனம் வருந்தினாய்;* இந்தத் தேசம் கோரமாய்க் கிடக்கும், இந்த மக்கள் சபிக்கப்பட்டவர்களாய் இருப்பார்கள் என்று நான் சொன்னதைக் கேட்டு யெகோவாவுக்கு முன்னால் தாழ்மையாக நடந்துகொண்டாய்.+ உன் உடையைக் கிழித்துக்கொண்டு+ என் முன்னால் அழுதாய். அதனால், நானும் உன்னுடைய மன்றாட்டைக் கேட்டேன் என்று யெகோவா சொல்கிறார்.

  • 2 நாளாகமம் 33:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 கடவுளிடம் ஜெபம் செய்துகொண்டே இருந்தார். அவர் கெஞ்சுவதைப் பார்த்து கடவுள் இரக்கப்பட்டார், கருணை காட்டச் சொல்லி அவர் மன்றாடியபோது அதைக் கேட்டார். அதனால், அவரை மறுபடியும் எருசலேமின் ராஜாவாக்கினார்.+ யெகோவாதான் உண்மையான கடவுள் என்பதை மனாசே அப்போது புரிந்துகொண்டார்.+

  • சங்கீதம் 22:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 அடக்கி ஒடுக்கப்படுகிறவனின் கஷ்டத்தை அவர் அற்பமாக நினைக்கவும் இல்லை, அலட்சியப்படுத்தவும் இல்லை.+

      அவனிடமிருந்து தன்னுடைய முகத்தை அவர் மறைத்துக்கொள்ளவும் இல்லை.+

      உதவி கேட்டு அவன் கதறியதை அவர் கேட்டார்.+

  • சங்கீதம் 34:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 உள்ளம் உடைந்துபோனவர்களின் பக்கத்திலேயே யெகோவா இருக்கிறார்.+

      மனம் நொந்துபோனவர்களை* அவர் காப்பாற்றுகிறார்.+

  • நீதிமொழிகள் 28:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 ஒருவன் தன்னுடைய குற்றங்களை மறைக்கப் பார்த்தால், அவன் நினைத்தது நடக்காது.+

      ஆனால், குற்றங்களை ஒத்துக்கொண்டு திரும்பவும் செய்யாமல் இருப்பவன் இரக்கம் பெறுவான்.+

  • ஏசாயா 57:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 உயர்ந்தவரும் உன்னதமானவரும், என்றென்றும் வாழ்கிறவரும்,+

      பரிசுத்தர் என்ற பெயர் உள்ளவருமான கடவுள்+ சொல்வது இதுதான்:

      “நான் மேலே பரிசுத்தமான இடத்தில் குடியிருக்கிறேன்.+

      ஆனாலும், நெஞ்சம் நொறுங்கியவர்களோடும் துவண்டுபோனவர்களோடும் இருக்கிறேன்.

      எளியவர்களுக்குப் புத்துயிர் அளிக்கிறேன்.

      நெஞ்சம் நொறுங்கியவர்களுக்குப் புதுத்தெம்பு கொடுக்கிறேன்.+

  • லூக்கா 15:22-24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 ஆனால் அவனுடைய அப்பா தன் அடிமைகளிடம், ‘சீக்கிரம்! முதல்தரமான அங்கியைக் கொண்டுவந்து இவனுக்குப் போட்டுவிடுங்கள். இவனுடைய விரலில் மோதிரத்தையும் காலில் செருப்பையும் போட்டுவிடுங்கள். 23 கொழுத்த கன்றுக்குட்டியைக் கொண்டுவந்து அடியுங்கள், நாம் சாப்பிட்டுக் கொண்டாடுவோம். 24 ஏனென்றால், என்னுடைய மகன் செத்துப்போயிருந்தான், இப்போது உயிரோடு வந்துவிட்டான்;+ காணாமல் போயிருந்தான், இப்போது கிடைத்துவிட்டான்’ என்று சொன்னார். அதனால், அவர்கள் சந்தோஷமாகக் கொண்டாட ஆரம்பித்தார்கள்.

  • லூக்கா 18:13, 14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 தூரத்தில் நின்றுகொண்டிருந்த வரி வசூலிப்பவனோ, வானத்தைப் பார்ப்பதற்குக்கூட துணியாமல், தன் நெஞ்சில் அடித்துக்கொண்டு, ‘கடவுளே, இந்தப் பாவிக்குக் கருணை காட்டுங்கள்’+ என்று ஜெபம் செய்தான். 14 நான் உங்களுக்குச் சொல்கிறேன், அந்தப் பரிசேயனைவிட இவனே அதிக நீதியுள்ளவனாகத் தன் வீட்டுக்குத் திரும்பிப் போனான்.+ ஏனென்றால், தன்னைத்தானே உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான்; தன்னைத்தானே தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்