உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 12:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 உடனே தாவீது, “நான் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்துவிட்டேன்”+ என்று சொன்னார். அதற்கு நாத்தான், “யெகோவா உங்கள் பாவத்தை மன்னித்துவிட்டார்.+ நீங்கள் சாக மாட்டீர்கள்.+

  • 2 நாளாகமம் 33:12, 13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 அவர் இக்கட்டில் தவித்தபோது, கருணை காட்டச் சொல்லி யெகோவா தேவனிடம் கெஞ்சினார். தன்னுடைய முன்னோர்களின் கடவுள் முன்னால் மிகவும் தாழ்மையோடு நடந்துகொண்டார். 13 கடவுளிடம் ஜெபம் செய்துகொண்டே இருந்தார். அவர் கெஞ்சுவதைப் பார்த்து கடவுள் இரக்கப்பட்டார், கருணை காட்டச் சொல்லி அவர் மன்றாடியபோது அதைக் கேட்டார். அதனால், அவரை மறுபடியும் எருசலேமின் ராஜாவாக்கினார்.+ யெகோவாதான் உண்மையான கடவுள் என்பதை மனாசே அப்போது புரிந்துகொண்டார்.+

  • சங்கீதம் 32:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 நான் எதையும் வெளியே சொல்லாத வரைக்கும்,

      நாளெல்லாம் குமுறிக் குமுறியே என் எலும்புகள் தளர்ந்துபோயின.+

  • சங்கீதம் 32:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 கடைசியில், என் பாவத்தை உங்களிடம் ஒத்துக்கொண்டேன்.

      என் தவறுகள் எதையும் மறைக்கவில்லை.+

      “என்னுடைய குற்றங்களை யெகோவாவிடம் சொல்வேன்”+ என்றேன்.

      நீங்களும் என்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்தீர்கள்.+ (சேலா)

  • சங்கீதம் 51:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 51 கடவுளே, உங்களுடைய மாறாத அன்பின்படி எனக்குக் கருணை காட்டுங்கள்.+

      உங்களுடைய மகா இரக்கத்தின்படி என் குற்றங்களைத் துடைத்தழியுங்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்