4 நீ கடவுளிடம் எதையாவது நேர்ந்துகொண்டால், அதை நிறைவேற்றத் தாமதிக்காதே.+ ஏனென்றால், நேர்ந்துகொண்டதை நிறைவேற்றாத முட்டாள்களைக் கடவுளுக்குப் பிடிக்காது.+ நீ ஏதாவது நேர்ந்துகொண்டால், அதை நிறைவேற்று.+ 5 நேர்ந்துகொண்டதை நிறைவேற்றாமல் இருப்பதைவிட நேர்ந்துகொள்ளாமல் இருப்பதே மேல்.+