-
யாத்திராகமம் 22:22-24பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 விதவையையோ அப்பா இல்லாத பிள்ளையையோ* நீங்கள் கொடுமைப்படுத்தக் கூடாது.+ 23 அப்படிக் கொடுமைப்படுத்தும்போது அவன் என்னிடம் முறையிட்டால், அதை நான் நிச்சயம் கேட்பேன்.+ 24 என் கோபம் பற்றியெரியும், நான் உங்களை வாளால் கொன்றுபோடுவேன். அப்போது, உங்கள் மனைவிகள் விதவைகளாவார்கள். உங்கள் பிள்ளைகள் அப்பா இல்லாமல் தவிப்பார்கள்.
-
-
உபாகமம் 10:17, 18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 உங்கள் கடவுளாகிய யெகோவாதான் தேவாதி தேவன்,+ எஜமான்களுக்கெல்லாம் எஜமான், வல்லமை படைத்தவர், அதிசயமும் அற்புதமுமானவர், யாருக்கும் பாரபட்சம் காட்டாதவர்,+ லஞ்சம் வாங்காதவர், 18 அப்பா இல்லாத பிள்ளைக்கும்* விதவைக்கும் நியாயம் செய்கிறவர்,+ உங்களோடு வாழ்கிற வேறு தேசத்து ஜனங்களை நேசிக்கிறவர்,+ அவர்களுக்கு உணவும் உடையும் தருகிறவர்.
-