-
எரேமியா 7:24-26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 அவர்கள் அதைக் காதில் வாங்கவே இல்லை.+ அதற்குப் பதிலாக, தங்களுடைய திட்டங்களின்படியே நடந்தார்கள், தங்களுடைய பொல்லாத இதயத்தின் போக்கிலேயே பிடிவாதமாகப் போனார்கள்.+ முன்னோக்கிப் போவதற்குப் பதிலாகப் பின்னோக்கியே போனார்கள். 25 உங்கள் முன்னோர்கள் எகிப்திலிருந்து வந்த நாளிலிருந்து இந்த நாள்வரை நிலைமை இப்படித்தான் இருந்திருக்கிறது.+ நான் என்னுடைய ஊழியர்களாகிய தீர்க்கதரிசிகள் எல்லாரையும் தினமும் அனுப்பினேன்; திரும்பத் திரும்ப அனுப்பினேன்.+ 26 ஆனால், அவர்கள் எதையுமே காதில் வாங்கவில்லை.+ முரட்டுப் பிடிவாதம் பிடித்தார்கள். அவர்களுடைய முன்னோர்களைவிட மோசமாக நடந்துகொண்டார்கள்!
-