-
2 ராஜாக்கள் 17:13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 யெகோவா தன்னுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரையும், தரிசனக்காரர்கள் ஒவ்வொருவரையும் அனுப்பி இஸ்ரவேலையும் யூதாவையும் எச்சரித்துக்கொண்டே இருந்தார்.+ “பொல்லாத வழிகளைவிட்டு மனம் திருந்துங்கள்!+ என்னுடைய கட்டளைகளுக்கும் சட்டதிட்டங்களுக்கும் கீழ்ப்படியுங்கள்; உங்களுடைய முன்னோர்கள் மூலம் நான் கொடுத்த எல்லா சட்டங்களுக்கும், என்னுடைய தீர்க்கதரிசிகள் மூலம் நான் சொன்ன எல்லா வார்த்தைகளுக்கும் கீழ்ப்படியுங்கள்” என்று சொல்லியிருந்தார்.
-
-
2 நாளாகமம் 36:15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 இருந்தாலும், அவர்களுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவா தன்னுடைய மக்களையும் ஆலயத்தையும் நினைத்து பரிதாபப்பட்டு, தன்னுடைய தூதுவர்களை அனுப்பி அவர்களை எச்சரித்தார். திரும்பத் திரும்ப எச்சரித்துக்கொண்டே இருந்தார்.
-
-
நெகேமியா 9:17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 உங்களுடைய பேச்சைக் கேட்க மறுத்தார்கள்.+ நீங்கள் செய்த மாபெரும் அற்புதங்களை மறந்தார்கள். அவர்கள் முரட்டுப் பிடிவாதம் பிடித்து, எகிப்துக்கே அடிமைகளாய்த் திரும்பிப் போவதற்காக ஒரு தலைவரை நியமித்தார்கள்.+ ஆனால் கடவுளே, நீங்கள் மன்னிக்கிறவர்,* கரிசனையும்* இரக்கமும் உள்ளவர், சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர்.+ அதனால் நீங்கள் அவர்களைக் கைவிடவில்லை.+
-