-
எண்ணாகமம் 11:31-34பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
31 பின்பு, யெகோவா பெருங்காற்றை வீச வைத்தார். அந்தக் காற்று கடலிலிருந்து காடைகளை அடித்துக்கொண்டு வந்தது.+ அவை ஒருநாள் பயணத் தூரத்தின் அளவுக்கு முகாமின் எல்லா பக்கங்களிலும் வந்து, தரைக்கு மேலே சுமார் இரண்டு முழ* உயரத்துக்குக் குவிந்தன. 32 அதனால், ஜனங்கள் அன்று ராத்திரி பகலாகவும், அடுத்த நாள் முழுவதும் காடைகளைச் சேகரித்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் சேகரித்த காடைகள் 10 ஹோமர் அளவுக்கும்* அதிகமாக இருந்தது. பின்பு, முகாம் முழுக்க அவற்றைப் பரப்பி வைத்தார்கள். 33 ஆனால், அவர்கள் அந்த இறைச்சியைத் தின்றுதீர்ப்பதற்கு முன்பே, அதை மென்றுகொண்டிருக்கும்போதே, யெகோவாவின் கோபம் அவர்கள்மேல் பற்றியெரிந்தது. அவர்களில் ஏராளமானவர்களை யெகோவா கொன்று குவித்தார்.+
34 உணவுக்காக ஆலாய்ப் பறந்தவர்கள் அங்கே அடக்கம் செய்யப்பட்டார்கள்.+ அதனால், அந்த இடத்துக்கு கிப்ரோத்-அத்தாவா*+ என்று பெயர் வைக்கப்பட்டது.
-