17 இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளும், உங்களை விடுவிக்கிறவருமான யெகோவா+ சொல்வது இதுதான்:
“யெகோவாவாகிய நானே உங்கள் கடவுள்.
உங்களுக்குப் பிரயோஜனமானதை நான் கற்றுக்கொடுக்கிறேன்.+
நீங்கள் நடக்க வேண்டிய வழியில் உங்களை நடத்துகிறேன்.+
18 நீங்கள் என்னுடைய கட்டளைகளைக் கேட்டு நடந்தால்+ எவ்வளவு நன்றாக இருக்கும்!
அப்போது, உங்கள் சமாதானம் ஆற்றைப் போலவும்,+
உங்கள் நீதி கடல் அலைகளைப் போலவும் இருக்கும்.+