11 இசக்காருக்கும் ஆசேருக்கும் சொந்தமான பகுதிகளில், பெத்-செயானும் அதன் சிற்றூர்களும், இப்லெயாமும்+ அதன் சிற்றூர்களும், தோரின்+ குடிமக்களும் அதன் சிற்றூர்களும், மலைப்பகுதிகளாகிய எந்தோர்,+ தானாக்,+ மெகிதோ ஆகியவற்றின் குடிமக்களும் அவற்றின் சிற்றூர்களும் மனாசே வம்சத்தாருக்குக் கிடைத்தன.