உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 15:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 கடவுள் அவர்களிடம், “யெகோவாவாகிய நான் சொல்லும் வார்த்தையை நீங்கள் கவனமாகக் கேட்டு, எனக்குப் பிரியமானதைச் செய்து, என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிமுறைகள் எல்லாவற்றையும் பின்பற்றினால்,+ எகிப்தியர்கள்மேல் கொண்டுவந்த எந்தக் கொள்ளைநோயையும் நான் உங்கள்மேல் கொண்டுவர மாட்டேன்.+ யெகோவாவாகிய நான் உங்களைக் குணப்படுத்துகிறேன்”+ என்று சொன்னார்.

  • சங்கீதம் 41:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 அவன் சுகமில்லாமல் படுத்துக் கிடக்கும்போது யெகோவா அவனைத் தாங்குவார்.+

      அவன் வியாதியில் கிடக்கும்போது அவனுடைய படுக்கையை முழுவதுமாக மாற்றிப்போடுவார்.

  • சங்கீதம் 147:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 உள்ளம் உடைந்தவர்களை அவர் குணமாக்குகிறார்.

      அவர்களுடைய காயங்களுக்குக் கட்டுப் போடுகிறார்.

  • ஏசாயா 33:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 “எனக்கு உடம்பு சரியில்லை” என்று யாருமே சொல்ல மாட்டார்கள்.+

      தேசத்து ஜனங்களுடைய குற்றங்கள் மன்னிக்கப்பட்டிருக்கும்.+

  • யாக்கோபு 5:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 விசுவாசத்தோடு செய்யப்படுகிற ஜெபம் வியாதியாக* இருப்பவனைக் குணமாக்கும், யெகோவா* அவனை எழுந்திருக்க வைப்பார். அதோடு, அவன் பாவங்கள் செய்திருந்தால், அவற்றை அவர் மன்னிப்பார்.

  • வெளிப்படுத்துதல் 21:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார்.+ இனிமேல் மரணம் இருக்காது,+ துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது.+ முன்பு இருந்தவை ஒழிந்துபோய்விட்டன” என்று சொல்வதைக் கேட்டேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்