-
யாத்திராகமம் 10:13-15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 உடனே மோசே எகிப்து தேசத்தின் மேல் தன்னுடைய கோலை நீட்டினார். அப்போது யெகோவா, கிழக்குக் காற்று வீசும்படி செய்தார். அன்று பகலிலும் ராத்திரியிலும் காற்று வீசிக்கொண்டே இருந்தது. விடியற்காலையில், அது வெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டு வந்தது. 14 அந்த வெட்டுக்கிளிகள் எகிப்து தேசத்தையே மூடின. அவை பயங்கரமாகப் படையெடுத்து வந்து+ மூலைமுடுக்கெல்லாம் பரவின.+ அவ்வளவு ஏராளமான வெட்டுக்கிளிகள் அதற்குமுன் வந்ததே இல்லை, இனிமேலும் வரப்போவதில்லை. 15 அவை அந்தத் தேசத்தின் நிலப்பரப்பையே மூடிவிட்டன. அவற்றால் தேசமே இருண்டுபோனது. ஆலங்கட்டி மழைக்குத் தப்பிய பயிர்பச்சைகள் எல்லாவற்றையும், மரங்களிலிருந்த பழங்கள் எல்லாவற்றையும் அவை தின்றுதீர்த்தன. எகிப்து தேசமெங்கும் இருந்த மரங்களையும் செடிகொடிகளையும் அவை மொட்டையாக்கிவிட்டன.
-