-
ஆதியாகமம் 15:13, 14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 அவரிடம் கடவுள், “உன்னுடைய சந்ததியில் வருகிறவர்கள் வேறொரு தேசத்தில் அன்னியர்களாகக் குடியிருப்பார்கள்; அந்தத் தேசத்து ஜனங்கள் 400 வருஷங்களுக்கு+ அவர்களை அடிமைகளாக வைத்துக் கொடுமைப்படுத்துவார்கள். இது நடக்கப்போவது உறுதி. 14 ஆனால், அவர்களை அடிமைப்படுத்திய தேசத்தை நான் தண்டிப்பேன்.+ அதன்பின், அவர்கள் அங்கிருந்து நிறைய பொருள்களை எடுத்துக்கொண்டு வருவார்கள்.+
-
-
யாத்திராகமம் 3:22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 இஸ்ரவேல் பெண்கள் தங்களுடைய வீட்டிலும் அக்கம்பக்கத்திலும் இருக்கிற எகிப்தியப் பெண்களிடம், தங்கத்திலும் வெள்ளியிலும் செய்யப்பட்ட பொருள்களையும் துணிமணிகளையும் கேட்டு வாங்க வேண்டும். அவற்றைத் தங்களுடைய மகன்களுக்கும் மகள்களுக்கும் போட்டுவிட வேண்டும். இப்படி, நீங்கள் எகிப்தியர்களின் சொத்துகளை எடுத்துக்கொண்டு வர* வேண்டும்”+ என்று சொன்னார்.
-