-
யோசுவா 1:7, 8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 தைரியமாகவும் ரொம்பவே உறுதியாகவும் இரு. என் ஊழியன் மோசே உனக்குக் கொடுத்த திருச்சட்டம் முழுவதையும் கவனமாகக் கடைப்பிடி. அதைவிட்டு வலது பக்கமோ இடது பக்கமோ விலகிப் போகாதே,+ அப்போதுதான் நீ எல்லாவற்றையும் ஞானமாகச் செய்வாய்.+ 8 இந்தத் திருச்சட்ட புத்தகத்தில் உள்ள விஷயங்களைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டே இரு.+ அதில் எழுதியிருக்கிற எல்லாவற்றையும் கவனமாய்க் கடைப்பிடிப்பதற்காக ராத்திரியும் பகலும் தாழ்ந்த குரலில் அதை வாசி.*+ அப்போதுதான் வாழ்க்கையில் உனக்கு வெற்றி கிடைக்கும், நீ ஞானமாகவும் நடப்பாய்.+
-
-
2 தீமோத்தேயு 3:14, 15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 ஆனால், நீ கற்றுக்கொண்ட விஷயங்களை, நம்பிக்கை வைக்கும் விதத்தில் உனக்குப் பக்குவமாக எடுத்துச்சொல்லப்பட்ட விஷயங்களை விடாமல் கடைப்பிடி;+ அவற்றை யாரிடமிருந்து கற்றுக்கொண்டாய் என்பது உனக்குத் தெரியுமே. 15 அதுவும், பரிசுத்த எழுத்துக்களை நீ சிசுப் பருவத்திலிருந்தே+ அறிந்திருக்கிறாய்;+ அவை உனக்கு ஞானத்தைத் தந்து கிறிஸ்து இயேசுமேல் வைத்திருக்கிற விசுவாசத்தின் மூலம் நீ மீட்கப்படுவதற்கு வழிநடத்தும்.+
-