-
எபேசியர் 2:19, 20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 அதனால், நீங்கள் இனி சம்பந்தமில்லாதவர்களும் கிடையாது, அன்னியர்களும் கிடையாது,+ ஆனால் பரிசுத்தவான்களுடைய சக குடிமக்களாகவும்+ கடவுளுடைய வீட்டாராகவும் இருக்கிறீர்கள்.+ 20 அதோடு, அப்போஸ்தலர்களையும் தீர்க்கதரிசிகளையும் அஸ்திவாரமாக வைத்துக் கட்டப்பட்டிருக்கிறீர்கள்.+ கிறிஸ்து இயேசுவே அதற்கு மூலைக்கல்லாக இருக்கிறார்.+
-
-
1 பேதுரு 2:4-7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 மனிதர்களால் ஒதுக்கித்தள்ளப்பட்டதாக+ இருந்தாலும், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அவருடைய பார்வையில் விலைமதிப்புள்ளதாகவும் இருக்கிற உயிருள்ள கல்லாகிய நம் எஜமானிடம்+ வரும்போது, 5 உயிருள்ள கற்களாகிய நீங்களும்கூட ஆன்மீக வீடாகக் கட்டப்படுகிறீர்கள்.+ கடவுளுக்குப் பிரியமான ஆன்மீக பலிகளை+ இயேசு கிறிஸ்துவின் மூலம் கொடுக்கும்படி, பரிசுத்த குருமார்களாக இருக்க அப்படிக் கட்டப்படுகிறீர்கள். 6 ஏனென்றால், “இதோ! நான் சீயோனில் ஒரு மூலைக்கல்லை நாட்டுகிறேன்; அது தேர்ந்தெடுக்கப்பட்ட, விலைமதிப்புள்ள மூலைக்கல்; அதன்மீது விசுவாசம் வைக்கிற யாருமே ஒருபோதும் ஏமாற்றம் அடைய* மாட்டார்கள்” என்று வேதவசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.+
7 அதனால், விசுவாசிகளாக* இருக்கிற உங்களுக்கு அவர் மதிப்புள்ளவராக இருக்கிறார். ஆனால் விசுவாசிகளாக இல்லாதவர்களுக்கு, “கட்டிடம் கட்டுகிறவர்கள் ஒதுக்கித்தள்ளிய+ கல்லே மூலைக்குத் தலைக்கல்லாக ஆனது.”+
-