உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 25:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 யெகோவா நல்லவர், நேர்மையானவர்.+

      அதனால்தான், பாவிகளுக்கு நல்ல வழியைக் கற்றுக்கொடுக்கிறார்.+

  • நாகூம் 1:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 யெகோவா நல்லவர்.+ இக்கட்டு நாளில் அவர் கோட்டையைப் போல இருக்கிறார்.+

      அவரிடம் அடைக்கலம் தேடி வருகிறவர்களை அக்கறையாகக் கவனித்துக்கொள்கிறார்.+

  • மத்தேயு 5:44, 45
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 44 ஆனால் நான் சொல்கிறேன், உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள்,+ உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்.+ 45 இப்படிச் செய்யும்போது, உங்களுடைய பரலோகத் தகப்பனுக்குப் பிள்ளைகளாக+ இருப்பீர்கள். ஏனென்றால், அவர் நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் சூரியனை உதிக்க வைக்கிறார்; நீதிமான்களுக்கும் அநீதிமான்களுக்கும் மழையைப் பெய்ய வைக்கிறார்.+

  • அப்போஸ்தலர் 14:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 ஆனாலும், அவர் தன்னைப் பற்றிச் சாட்சி கொடுக்காமல் இருந்ததில்லை.+ எப்படியென்றால், வானத்திலிருந்து மழையையும், பருவ காலங்களில் அமோக விளைச்சலையும்,+ ஏராளமான உணவையும் உங்களுக்குத் தந்து, உங்கள் உள்ளத்தைச் சந்தோஷத்தால் நிரப்பி நன்மை செய்திருக்கிறார்”+ என்று சத்தமாகச் சொன்னார்கள்.

  • யாக்கோபு 1:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 நல்ல பரிசுகள் ஒவ்வொன்றும், மிகச் சிறந்த* அன்பளிப்புகள் ஒவ்வொன்றும் பரலோகத்திலிருந்து வருகின்றன,+ ஆம், ஒளியின் தகப்பனிடமிருந்து வருகின்றன;+ அவர் நிழலைப் போல் மாறிக்கொண்டே இருப்பவர் அல்ல.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்