21 உடனே தானியேல், “ராஜாவே, நீங்கள் நீடூழி வாழ்க! 22 என் கடவுள் அவருடைய தூதனை அனுப்பி சிங்கங்களின் வாயை அடைத்ததால்+ அவை என்னை ஒன்றுமே செய்யவில்லை.+ நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பது அவருக்குத் தெரியும். ராஜாவே, உங்களுக்கும் நான் எந்தக் கெடுதலும் செய்ததில்லை” என்றார்.