-
1 சாமுவேல் 15:22, 23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 அதற்கு சாமுவேல், “யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதைவிட தகன பலிகளும் காணிக்கைகளும் யெகோவாவுக்குப் பிரியமாக இருக்குமா?+ பலி செலுத்துவதைவிட கீழ்ப்படிவதுதான் முக்கியம்,+ செம்மறியாட்டுக் கடாவின் கொழுப்பைச்+ செலுத்துவதைவிட அவர் பேச்சைக் கேட்பதுதான் முக்கியம். 23 கீழ்ப்படியாமல் போவது+ பில்லிசூனியத்தில் ஈடுபடும் பாவத்துக்குச்+ சமம். அகங்காரத்தோடு* நடந்துகொள்வது மாயமந்திரம் செய்வதற்கும் சிலைகளை* வணங்குவதற்கும் சமம். யெகோவாவின் கட்டளையை+ நீ ஒதுக்கித்தள்ளிவிட்டாய், அதனால் ராஜாவாக இல்லாதபடி அவர் உன்னை ஒதுக்கித்தள்ளிவிட்டார்”+ என்று சொன்னார்.
-