-
1 ராஜாக்கள் 4:29-31பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
29 சாலொமோனுக்கு ஞானத்தையும் பகுத்தறிவையும் மிக அதிகமாகக் கடவுள் கொடுத்தார். கடற்கரை மணலைப் போல் மிகவும் பரந்த இதயத்தை* கொடுத்தார்.+ 30 கிழக்கத்திய மக்களையும் எகிப்தியர்களையும்விட சாலொமோன் ஞானத்தில் சிறந்து விளங்கினார்.+ 31 ஞானத்தில் அவருக்குச் சமமாக யாருமே இருக்கவில்லை. எஸ்ராகியனான ஏத்தான்,+ மாகோலின் மகன்களான ஏமான்,+ கல்கோல்,+ தர்தா ஆகியோரைவிட அவர் ஞானமுள்ளவராக இருந்தார். சுற்றியிருந்த எல்லா தேசங்களுக்கும் அவருடைய பேரும் புகழும் பரவியது.+
-
-
2 நாளாகமம் 1:10-12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 இந்த மக்களை நல்ல முறையில் வழிநடத்த இப்போது எனக்கு ஞானத்தையும் அறிவையும் கொடுங்கள்.+ இல்லாவிட்டால், இத்தனை ஏராளமான மக்களுக்கு என்னால் எப்படி நீதி வழங்க முடியும்?”+ என்றார்.
11 அதற்குக் கடவுள், “செல்வத்தையோ பொருளையோ பேர்புகழையோ எதிரிகளின் உயிரையோ நீண்ட ஆயுசையோ நீ கேட்கவில்லை. அதற்குப் பதிலாக, என்னுடைய மக்களுக்கு* நீதி வழங்க ஞானத்தையும் அறிவையும் கேட்டிருக்கிறாய்.+ அதனால், நீ மனதார ஆசைப்பட்டபடியே, 12 ஞானத்தையும் அறிவையும் உனக்குத் தருவேன். அதோடு, உனக்கு முன்பும் சரி, பின்பும் சரி, வேறெந்த ராஜாவுக்கும் இல்லாத அளவுக்குச் செல்வத்தையும் பொருளையும் பேர்புகழையும் தருவேன்”+ என்று சொன்னார்.
-