-
உபாகமம் 15:10, 11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 நீங்கள் அவனுக்குத் தாராளமாகக் கொடுக்க வேண்டும்,+ வேண்டாவெறுப்போடு கொடுக்கக் கூடாது. அப்போதுதான், உங்கள் கடவுளாகிய யெகோவா நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார்.+ 11 தேசத்தில் எப்போதும் ஏழைகள் இருக்கத்தான் செய்வார்கள்.+ அதனால்தான், ‘உங்கள் தேசத்திலுள்ள பாவப்பட்ட ஏழை சகோதரனுக்குத் தாராளமாக அள்ளிக் கொடுக்க வேண்டும்’+ என்று நான் கட்டளை கொடுக்கிறேன்.
-
-
லூக்கா 14:13, 14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 அதனால் விருந்து கொடுக்கும்போது, ஏழைகளையும் உடல் ஊனமானவர்களையும் கால் ஊனமானவர்களையும் பார்வை இல்லாதவர்களையும் அழையுங்கள்.+ 14 அப்போது சந்தோஷப்படுவீர்கள். ஏனென்றால், உங்களுக்குக் கைமாறு செய்ய அவர்களிடம் ஒன்றும் இருக்காது. ஆனால், நீதிமான்கள் உயிரோடு எழுப்பப்படும்போது+ உங்களுக்குக் கைமாறு கிடைக்கும்” என்று சொன்னார்.
-