உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 19:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 யோனத்தான் தன்னுடைய அப்பா சவுலிடம் தாவீதைப் பற்றி நல்ல விதமாகப் பேசி,+ “ராஜாவாக இருக்கிற நீங்கள் உங்களுடைய ஊழியனாகிய தாவீதுக்கு எந்தக் கெடுதலும் செய்யக் கூடாது. ஏனென்றால், அவன் உங்களுக்கு எந்தக் கெடுதலும் செய்யவில்லை. சொல்லப்போனால், உங்களுக்கு நல்லதுதான் செய்திருக்கிறான்.

  • 1 சாமுவேல் 25:23, 24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 தாவீதைப் பார்த்தவுடன் அபிகாயில் கழுதையைவிட்டு அவசர அவசரமாக இறங்கி, அவருக்கு முன்னால் போய் மண்டிபோட்டு, தரைவரைக்கும் குனிந்து வணங்கினாள். 24 பின்பு அவருடைய காலில் விழுந்து, “என் எஜமானே, இந்தப் பழியை நான் ஏற்றுக்கொள்கிறேன். உங்களிடம் பேச இந்த அடிமைப் பெண்ணை அனுமதியுங்கள், இந்த அடிமைப் பெண் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்.

  • எஸ்தர் 4:13, 14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அப்போது, மொர்தெகாய் அவரைத் திரும்ப எஸ்தரிடம் அனுப்பி, “நீ ராஜாவின் அரண்மனையில் இருப்பதால், மற்ற யூதர்கள் கொல்லப்படும்போது நீ மட்டும் தப்பித்துவிடலாம் என்று நினைக்காதே. 14 நீ இப்போது அமைதியாக இருந்தால், யூதர்களுக்கு உதவியும் விடுதலையும் வேறொரு வழியில் கிடைக்கும்,+ ஆனால் நீயும் உன் அப்பாவின் குடும்பத்தாரும் அழிந்துபோவீர்கள். யாருக்குத் தெரியும், இப்படிப்பட்ட காலத்தில் உதவி செய்வதற்காகவே நீ ராணியாக ஆகியிருக்கலாம்”+ என்று சொல்லச் சொன்னார்.

  • சங்கீதம் 145:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 உங்களுடைய ஆட்சியின் மகிமையை அவர்கள் அறிவிப்பார்கள்.+

      உங்களுடைய வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள்.+

  • நீதிமொழிகள் 9:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 கேலி செய்கிறவனைக் கண்டிக்காதே, அவன் உன்னை வெறுப்பான்.+

      ஞானமுள்ளவனைக் கண்டி, அவன் உன்னை நேசிப்பான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்