-
1 ராஜாக்கள் 21:20, 21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 ஆகாப் எலியாவைப் பார்த்து, “எதிரியே,+ என்னைக் கண்டுபிடித்து இங்கேயும் வந்துவிட்டாயா?” என்று கேட்டார். அதற்கு எலியா, “ஆமாம், கண்டுபிடித்துவிட்டேன். கடவுள் சொல்வது என்னவென்றால், ‘யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்தே தீருவேன் என்று உறுதியாக இருக்கிறாயே.+ 21 அதனால் உனக்கு முடிவுகட்டுவேன், உன் வம்சத்தை அடியோடு அழிப்பேன்; ஆகாபின் வீட்டிலிருக்கிற எல்லா ஆண்களையும்,* ஆதரவற்றவர்களையும் அற்பமானவர்களையும்கூட, ஒழித்துக்கட்டுவேன்.+
-
-
1 ராஜாக்கள் 22:8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 அதற்கு இஸ்ரவேலின் ராஜா, “இன்னும் ஒருவன் இருக்கிறான். அவன் மூலமாகவும் யெகோவாவிடம் விசாரிக்கலாம்.+ ஆனால், அவனை எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது.+ ஏனென்றால், இதுவரை அவன் என்னைப் பற்றி நல்ல விஷயத்தைத் தீர்க்கதரிசனமாகச் சொன்னதே கிடையாது, கெட்ட விஷயத்தைத்தான் சொல்வான்.+ அவன் பெயர் மிகாயா, இம்லாவின் மகன்” என்றார். அதற்கு யோசபாத், “ராஜாவே, நீங்கள் இப்படியெல்லாம் பேசக் கூடாது” என்று சொன்னார்.
-
-
2 நாளாகமம் 25:15, 16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 அதனால், அமத்சியாமீது யெகோவாவுக்குப் பயங்கர கோபம் வந்தது. அவர் ஒரு தீர்க்கதரிசியை அமத்சியாவிடம் அனுப்பினார். அந்தத் தீர்க்கதரிசி அவரிடம் வந்து, “நீங்கள் வழிபடுகிற மற்ற தேசத்து தெய்வங்களால் தங்களுடைய சொந்த மக்களைக்கூட உங்களிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை. அவற்றைப் போய் ஏன் வணங்குகிறீர்கள்?”+ என்று கேட்டார். 16 அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே ராஜா அவரிடம், “போதும் நிறுத்து!+ உன்னிடம் நான் ஆலோசனை கேட்டேனா?+ இதற்கு மேல் பேசினால் உன்னைக் கொன்றுவிடுவேன்!” என்று சொன்னார். அப்போது அந்தத் தீர்க்கதரிசி, “நீங்கள் சிலைகளை வணங்குகிறீர்கள்; நான் சொன்ன ஆலோசனையையும் கேட்கவில்லை. அதனால், உங்களை அழிப்பதற்குக் கடவுள் முடிவுசெய்துவிட்டார்”+ என்று சொல்லிவிட்டு பேசுவதை நிறுத்தினார்.
-