உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 13:12, 13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 அதனால், நான் யெகோவாவிடம் உதவி கேட்பதற்கு முன்பே பெலிஸ்தியர்கள் கில்காலுக்கு வந்து என்னைத் தாக்கிவிடுவார்களோ என்று பயந்துதான், வேறு வழியில்லாமல் தகன பலி செலுத்திவிட்டேன்” என்று சொன்னார்.

      13 அதற்கு சாமுவேல், “நீ முட்டாள்தனமாக நடந்துகொண்டாய். உன் கடவுளாகிய யெகோவா சொன்ன கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போய்விட்டாய்.+ கீழ்ப்படிந்திருந்தால், இஸ்ரவேலை என்றென்றும் ஆளுகிற உரிமையை உனக்கும் உன் வம்சத்துக்கும் யெகோவா தந்திருப்பார்.

  • 1 சாமுவேல் 15:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 அதற்கு சாமுவேல், “யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதைவிட தகன பலிகளும் காணிக்கைகளும் யெகோவாவுக்குப் பிரியமாக இருக்குமா?+ பலி செலுத்துவதைவிட கீழ்ப்படிவதுதான் முக்கியம்,+ செம்மறியாட்டுக் கடாவின் கொழுப்பைச்+ செலுத்துவதைவிட அவர் பேச்சைக் கேட்பதுதான் முக்கியம்.

  • நீதிமொழிகள் 21:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 பொல்லாதவன் கொடுக்கிற பலி அருவருப்பானது என்றால்,+

      கெட்ட எண்ணத்தோடு* அவன் கொடுக்கிற பலி இன்னும் எந்தளவுக்கு அருவருப்பானது!

  • ஏசாயா 1:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 பிரயோஜனமில்லாத உணவுக் காணிக்கைகளைக் கொண்டுவருவதை நிறுத்துங்கள்.

      நீங்கள் தூபம் காட்டுவது எனக்கு அருவருப்பாக இருக்கிறது.+

      மாதப் பிறப்புகளிலும்*+ ஓய்வுநாட்களிலும்+ மாநாடுகளிலும்+ நீங்கள் செய்வதை என்னால் இனி சகிக்க முடியாது.

      என்னை வணங்குவதற்காகக் கூடிவரும்போது நீங்கள் மாயமந்திரத்தில் ஈடுபடுவதை என்னால் இனி பொறுக்க முடியாது.+

  • ஓசியா 6:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 நீங்கள் எனக்குப் பலிகள் கொடுக்க வேண்டும் என்றல்ல,

      எனக்கு விசுவாசமாக இருக்க* வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.

      நீங்கள் எனக்குத் தகன பலிகள் தர வேண்டும் என்றல்ல,

      என்னை நன்றாகத் தெரிந்துகொள்ள* வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்