10 எந்த உதவியும் செய்ய முடியாத தெய்வத்தையோ உலோகச் சிலையையோ
யாராவது உண்டாக்குவார்களா?+
11 சிலை செய்கிறவர்களின் கூட்டாளிகள் எல்லாரும் அவமானப்பட்டுப் போவார்கள்!+
உருவங்களைச் செய்கிறவர்கள் சாதாரண மனுஷர்கள்தான்.
அவர்கள் எல்லாரும் கூடிவந்து நிற்கட்டும்.
அவர்கள் நடுநடுங்கிப் போவார்கள், அவமானம் அடைவார்கள்.