உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 15:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 பார்வோனின் படைகளையும் ரதங்களையும் அவர் கடலில் தள்ளினார்.+

      அவனுடைய வீராதிவீரர்கள் செங்கடலில் மூழ்கினார்கள்.+

  • நெகேமியா 9:10, 11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 பார்வோனும் அவனுடைய ஊழியர்களும் அவனுடைய ஜனங்களும் எங்கள் முன்னோர்களிடம் அகங்காரத்தோடு* நடந்துகொண்டதால்,+ அவர்களுக்கு எதிராக அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்தீர்கள்.+ இப்படி, உங்கள் பெயருக்கு இன்றுவரை புகழ் சேர்த்திருக்கிறீர்கள்.+ 11 எங்கள் முன்னோர்களுக்கு முன்பாகக் கடலைப் பிளந்தீர்கள், அவர்கள் காய்ந்த தரையில் நடந்துபோனார்கள்.+ ஆனால் அவர்களைத் துரத்திக்கொண்டு வந்தவர்களை, கொந்தளிக்கும் கடலுக்குள் கல்லைத் தூக்கி எறிவதுபோல் தூக்கி எறிந்தீர்கள்.+

  • சங்கீதம் 106:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 காமின் தேசத்திலே அதிசயங்களையும்,+

      செங்கடலிலே பிரமிப்பூட்டும் செயல்களையும் செய்தவரை மறந்துவிட்டார்கள்.+

  • எசேக்கியேல் 29:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்:

      “எகிப்தின் ராஜாவான பார்வோனே,+

      ராட்சதக் கடல் பிராணி போல நைல் நதியின் ஓடைகளில் படுத்திருக்கிறவனே,+

      ‘நைல் நதி எனக்குத்தான் சொந்தம்,

      அதை எனக்காக நான் உண்டாக்கினேன்’ என்று சொல்கிறவனே,+

      நான் உன்னுடைய எதிரியாக வருவேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்